Posts

அச்சிலை அழகவள்

முத்திரை பதிக்க முதுகிலே ஏற முத்தமிட்டு எனக்கு மூச்சும் தான் வாங்க அச்சிலை அழகவள் அங்கம் ஆயிரம் கவி பாட கம்பன், கவிஞன் எல்லாம் காலைத் தேடி  இசை மீட்ட கற்று பெற்றவன் எல்லாம் மூளை மயங்கி முகவரி அறிய முகம் பார்த்து சிரித்துவிட்டால் இயங்குமா இதயமென ஆராய  அருகிலே சென்றேன். முந்தானை மூடி இருக்க முப்பேர்ப் படை அவள் கண்ணாக இருக்க அம்பெரிய தேவையில்லை அவள் கண் அசைத்தால் போதுமானது. கண்ணம் எனும் பெரு வெடிப்பு காதல் அது நிற்கும் என் துடிப்பு ஏதும் செயாத உதடு தானே உண்மையில் நான் மண்ணாக காரணமானது. கீழே எல்லாம் வேர்ருலகம் அந்த வளைவு ஒன்றில் என் உதடும் இணைத்து இழுத்திட ஆசைப்பட்டு இருகி போனேன்  இடுப்பல்ல இடி. தென்னங் கொழையிரண்டு தேன் சுவை பிரண்டு தேரிழுத்து போர் செய்வேன் பூவே உன் மார்ப்பாடா மனம் ஏங்கும் பூவோடு புதிர் எதற்கு பூட்டிட்ட கனி எதற்கு கீழோடு நான் சேர்வேன் உன் தொடையிடையே ஊஞ்சல் ஆட தூக்கம் தனை கெடுத்தாய் தூண்டில் எனை இழுத்தாய் தூரம் நின்று நீ துளிர்த்தால் தூக்கு போல வலி துரத்துதடி உடலும் என்னானும் உறுப்பும் என்னானும் உதிரம் என்னானும் என் உலகமே உன் உயிர்தானே.

இதயம்

ஏன் இத்தனை யோசனைகள் எனக்குள் யார் யாரையோ பார்த்து ஆசைக் கொள்கிறேன் யாவும் கிட்டே வருகையில் விளகி விடுக்கிறேன் ஏதோ தெரியாத புதிர் எல்லாம் எழுப்பி என்னை நானே புதைக்க நினைக்கிறேன் காதல் கொள்ள மனம் முயன்றும் காமம் கொள்ள உடல் முயன்றும் கடந்து செல்லும் நான் யாரோ..? பெண்கள் பார்த்தால் ஆசை தூவும் பெறாத இன்பம் இசையும் சேரும் பெற்று கொண்டு சென்றுவிட்டால் தேடல் தீரும் என்ற பயமோ எனக்கு.? பேர் எழுதி மடலிட்டு பேனா முள்ளும் முத்தமிட்டு கட்டி அணைத்து கட்டில் ஏறி காலம் போக்க வினை எதற்கோ..? எல்லாம் வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் நேரம் கரைய ஆசை மாறும் உள்ளம் எல்லாம் கரையாய் மாறி ஊற்றெடுத்து உயிர் வரை பாயும் செத்தப்பின அழுவோர் வேண்டி சேகறிக்கிறேன் சொந்தகள் நானும் மற்றப்படி யாரும் வேண்டாம் மனைவியே என் மாற்றுச் சிந்தனை. இரவிலே உறக்கம் இல்லை வெளிச்சம் தான் நான் பெறவேயில்லை கண்ணுள்ளே ஓடும் யாவும்  கையுக்கு வந்து சேரும் மாயை அழித்து வர ஒரு நல்ல இதயம் வேண்டும்.

சகி

தீ முதல் நீர் வரை தினம் எனை திண்ணும் தாமரை மோக முடி வைத்து மூச்சை நிறுத்தும் கண் அலை, வேத வினையெல்லாம் வேர்வையாவும் நெஞ்சலை தூது சென்று போர் தொடுத்தாள் உயிரை பறிக்கும் உதடு வலை மேல ஏறியவன் வீழ்ந்திடவே மேனி தாங்கா கடலலை மிச்சம் வைத்து உச்சம் தொட்டால் உயிர் வழியும் ஆவலை. பாலாடை நிறம் ஏந்தி பட்டுடை அணிந்த வந்தாள் மேலாடை நீக்கிடதான் மேனி ஆசை எதற்கு இணை.? பஞ்சம் நீக்கி பாசி ஆற்றி பாவம் பார்த்து ஊட்டி விட்டாள் தூங்கும் நேரம் போக தொட்டில் ஆட்டுவேன் என்னவளை. இடுப்பு கட்டி இனிப்பு தட்டி இரவெல்லாம் முத்தம் ஊட்டி முதுகிலே கோலம் காட்டி முடிவேலே பாடம் சூட்டி, படுக்கையில்  பட்டம் தீட்ட ஆசை கொண்டு ஒரு வட்டம் இட்டேன். வயிறிலிலே என்ன ஓசை அதற்கு கீழே, நான் காணாத இசை மீசை தொடாத ஆசை பாடாத புத்தன் போல கடந்த செல்ல முத்தம் தர இடம் தேடி  முடிவிலே இசையுடன் அசைப்போட்டேன். தேவதை உடை வேண்டும் தேவையில் இடை வேண்டும் கேளடி என் இருயிர் நீ என்னுயிர் கூட்டி கொண்டு செல்லடி சகி.

கவி

எத்தனை எழுதுகிறேன் யார் யாரோ படித்து விட்டனார், பாராட்டுக்கள் பல தூரும் பாவங்களும் வந்து சேரும். காதல்,காதலர் மேனி, மின்மினி மிச்சம், யச்சம், மிகுதி, தகுதி ஆண், பெண் ஆசை, மீசை என எழுத்துகள் அடிக்கி வந்திருக்கிறேன். முகம் தெரிய நபரும்  முத்தமிட்ட நபரும்  ரசித்து மிகைக்கையில நானும் கவிஞன் என்ற கர்வம் கர்ப்பம் கொள்ளும். விருதுகள் உண்டோ..? ஆம். வார்த்தை வர்த்தகமா..? ஆம். வலிகள் மொழியாகுமா..? ஆம். தனிமையில் தோழித்துணையா.? ஆம். மௌனம் இசை வழியா.? ஆம். அத்தனையும் அணைத்தெடுத்து கட்டி முடிச்சியிட்டு குழித்தோண்டி புதைக்க இடம் பார்த்து கவிதை என பெயர் வைத்தேன். ரசிக்க ரசனை இல்லை எழுதி கிழித்து இடமெறிந்தாலும் இறுதி சடங்கு போல் என்னும் உறுதி இல்லை. வந்தோர் மகிழ்ச்சி சென்றோர் மகிழ்ச்சி சிக்கி தவிக்கிறேன்  சில வலைப்போல். காட்டுக்குள் ஓடும் போது காலுக்கு தான் பாரம் நிலமாக இருக்க வேண்டி சருக்காக ஆனதென்ன.. விதையை விரும்பும் மனிதர் யாரோ புத்தன் கூட பூ விரும்பி கவிதை கிறுக்கின் கவலை தானே கண்கள் யாவும் நீர் தழும்பி...
ஏதோ சில நேரங்களில் வாழ்க்கை சோர்வடைந்துவிடுகிறது. ஏதும் இல்லை என்ற மனநிலை சில நேரம், ஏதுமே வேண்டாம் என்ற மன நிலை சில நேரம்,யோசனைக்கு பசி இல்லை என்ற நிலையும், யோசனையே பேய் போல் தொடரும் நிலையும்; வாழ்வே வேண்டாதா விருப்பம் என்றும், சில நம்பிக்கைகள் வேண்டும் என்றும்; ரயில் தண்டவாளம் போல் எதிர்திசையில் நீள்கிறது. காதல், கவிதைகள், முத்தங்கள், முற்போக்கு, கடவுள், கணிதம், மேதை, கட்டுரை, அரசியல், சினம், சினிமா, ஊடல், தேடல், பாடல், படுக்கை, பிறப்பு, இறப்பு, இழப்பு என அனைத்துமே நான் பார்த்து விட்டாதாக எண்ணம் வரும். சில நேரம் முத்தங்கள் பத்தவில்லை, யாரோரு மேனி மடல் தொட்டத்தில்லை, வேலை இல்லை, விளம்பரம் இல்லை, விமர்சனம் இல்லை, காதல் இல்லை, கற்புகலையவில்லை, ஆசைகள் அழியவில்லை, புத்தகம் பக்கம் மாறவில்லை,  மனைவி மக்கள் பார்க்கவில்லை,புத்திரன் இல்லை, புன்முருவல் இல்லை, இதுப்போன்று ஆலோசனை அறிந்தும் கூட மனம் ஏதோ நிம்மதி நாடவேயில்லை. ஏதோ சமயங்களில் சிரிக்கிறேன், சில சமயம் அழுக்கிறேன்.. பிடித்தவை செய்தாலும், பிடித்தவர் உடன் இருந்தாலும்,  மனம் தனிமையை அணைக்கிறது. ஏதோ ஒரு மீளயியலாத இதயம் எனக்குள். அதற...
சுவர் எங்கும் உன் வாசனை, சுருண்டு கிடந்து விழ்ந்துருக்கிறேன். நீ இருக்கிறாய் என்று நான் என்றும் நம்பியதில்லை, நீ இல்லாத போதே நாடகம் மெல்ல நடக்கிறது. அன்பு காதல் எல்லாம் கானல் போல் முன்னே செல்லும் போது மறைக்கிறது. இப்போதெல்லாம் நான் யாரிடமும் அதீதம் பேசுவதில்லை, பேசி அணைத்தவர்களும் அனல் வீசுகிறார்கள். நான் இருந்த இடத்தில் தான் நீ இருந்தாய், நான் வந்த பின்னே தானே உன்னை அழைத்து வந்தேன் எல்லாம் அவ்வாறு தானே; எனக்கு முன் நீ செல்வது என்னடா நீயாயம்.? நான் தானே சென்றிருக்க வேண்டும், தனியாக விட்டு சென்ற  விட்டாயே; இனி இரவுகளில் உன்னிடம் மறைத்து நான் எவ்வாறு அழுவேன்.? வந்து விடுக்கிறேன் விரைவில் உஷ்னம் தாங்க தவிக்கவில்லை இங்கே.

நானும்

ஏதேனும் கீரல் விழுந்தாலும் ஏதோ உடல்நடுங்கி விழுங்கி விடுவது ஏனோ எதையும் நினைக்க வழியில்ல வண்ணம் ஏக்கம் மட்டும் என்னுடன் இருப்பதேனோ விழியில் எந்த தேடலுமின்றி விதவையாக நிற்கும் மனம் சுற்றியறிய யாருமின்றி சுடுகாடு பிணம் போல் அனலும் நானும். அன்பு செலுத்தி கடக்க தான் நினைக்கிறேன் அரிவாள் போல் வெட்டி கிறிதே வலி ஆயிரம் அலைகள் என்னுள்ளே அடித்து வெடிக்கும் பாவமும் நானும். கண்ணீர் துடைக்கும் கைகள் வந்தால் கவனித்து நடித்து கலகம் செய்கிறேன் கற்பம் போல் வளரும் கவலை மரத்தை வெட்டி எறிய எப்படி.? வேரும் நானும். சோர்வு சேர்ந்து சோகங்கள் சூழும், சுகமே இல்லை என்ற எண்ணம் மட்டும் வாழ தூக்கிற்கு படி அளக்கும் பாதையும் நானும்.